மனத்தின் தோற்றம் - ஆய்வுக் கட்டுரைகள் (Manathin Thotram)
மனத்தின் தோற்றம் - ஆய்வுக் கட்டுரைகள் (Manathin Thotram):
‘மனத்தின் தோற்றம்’ என்னும் இந்த நூல் பதினாறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இவற்றுள், முதல் கட்டுரையாகிய ‘மனத்தின் தோற்றம்’ என்பதே நூலுக்குப் பெயராகச் சூட்டப் பெற்றுள்ளது. சிறு கதைகளையும் பெருங் கதைகளையுமே பெரிதும் விரும்பிப் படிக்கும் நம்மவர்கள், கதையல்லாத உரைநடைக் கட்டுரைகளை அதிலும் ஆய்வுக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பது அரிது.
இதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது. கதை படிக்கும் எளிய பயிற்சி நிலையிலேயே வைத்து நிலையாக மக்களைப் பழக்கி விடலாகாது. கதையல்லாத மற்ற ஆய்வுச் செய்திகளையும் படிக்கும் பொறுமையினையும் படித்துச் சுவைக்கும் திறனையும் வளர்த்துவிட வேண்டியது நம் போன்றோர் கடமையாகும். கதையல்லாத ஆய்வுச் செய்திகளைப் படிப்பதால், பல்வேறு செய்திகளைப் பற்றி அறிந்து பயன்பெறும் வளமான வாய்ப்பு பெறப்படும்.
இந்த அடிப்படையில், இந்த நூலில், உளவியல் - உடலியல் ஆகிய அறிவியல், மரஇன (தாவர) இயல், இலக்கியம், நாடகம், ஆடல் - பாடல், இலக்கணம், மொழியியல், வரலாறு, தரையியல், மன்பதை (சமூக) இயல், அறநெறி என்னும் பல துறைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகள் உருப்பெறப் பல மேற்கோள் நூல்கள் துணைபுரிந்துள்ளன. இந்நூல்களால், பழந்தமிழ் அறிஞர்கள் பல துறைகளில் பெற்றுள்ள அறிவுவளம் அறியவரும்.
உள்ளடக்கம்:
1. மனத்தின் தோற்றம்
2. உயிரினும் உயர்ந்தது
3. மலர்களும் மனையறமும்
4. கருத்து வெளியீட்டில் புதுமை
5. சுவையான சில செய்திகள்
6. சொல்லாட்சி
7. திருக்குறள் ஆட்சி
8. உவமையணி
9. தத்துவ ஆய்வு
10. பிற துறைகள்
11. முதுமொழி நூறு
12. மணிமேகலையில் பழக்க வழக்க மரபுகள்
13. மொழி ஒப்பியல்
14. திராவிட மொழிகளில் சில சொல்லாட்சிகளும் சொற்சுவைகளும்
15. சிலம்பில் இரு குரவைகள்
16. கம்பரின் காலம்
Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: [email protected]
This version of மனத்தின் தோற்றம் (Manathin Tho Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of மனத்தின் தோற்றம் (Manathin Tho Android App, We have 2 versions in our database. Please select one of them below to download.