- Fixed Performance issues
மக்கள் பலர் சுற்றுலா செல்கிறார்கள். நடைப்பயணம் செய்கிறார்கள், மலையேற்றம் செய்கிறார்கள். எதையோ சாதிக்க வேண்டும் என்று அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள். அதன் மூலம் தம் வாழ்வை ஒரு படி உயர்த்திக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் யாத்திரையின் நோக்கமே உங்களிடத்தில் பணிவைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஒரு யாத்திரிகரின் குறிக்கோள் உறுதியானது. என்ன ஆனாலும் சரி, அவ்விடத்தை சென்றடைய வேண்டும் என்ற அவர் எண்ணம் தளர்வதில்லை. வாழ்ந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அங்கே போயே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார். பல விஷயங்களுக்காக மக்கள் பயணம் செய்கிறார்கள். சிலர் எதையோ ஆய்வு செய்வதற்காக பயணம் செய்கிறார்கள். சிலர் தங்கள் தினசரி அலுவல்களில் இருந்தும், சிலர் தங்கள் குடும்பத்தின் தொந்தரவுகளில் இருந்து சிறிது விடுபட வேண்டும் என்றும் பயணம் செய்கிறார்கள்.
ஆனால் ஒரு புனித யாத்திரையின் நோக்கம் முற்றிலும் வேறுபட்டது. இது எதையோ அடையவேண்டும் என்றோ, எதையோ அறியவேண்டும் என்றோ, எதையோ பெறவேண்டும் என்றோ மேற்கொள்ளப்படுவது அல்ல. யாத்திரை என்பது உங்களைப் பணிவுள்ளவராக மாற்றும் ஒரு செயல்முறை. யாத்திரை என்றால், வேறு ஒரு தன்மை உங்களை ஆட்கொள்ள நீங்கள் அனுமதிக்கிறீர்கள். யாத்திரைக்காக நாம் ஏன் இமயத்தைத் தேர்ந்தெடுத்தோம், தெரியுமா? அது நிச்சயமாக உங்களை சிறியவராக உணரச் செய்யும், வேறு வழியேயில்லை. நீங்கள் எவ்வளவு திறன் படைத்தவராக இருந்தாலும் சரி, இமயத்தின் முன் நீங்கள் சிறியவராக உணர்வதைத் தவிர்க்க முடியாது. கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தால், உங்களை ஒரு மிகச்சிறிய உயிரினம் போல் உணர்வீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும்போது ஒரு எறும்பு எப்படி தன்னை உணருமோ, அப்படி இமயத்தின் முன்னிலையில் நீங்கள் உங்களை உணர்வீர்கள். இந்த முழு படைப்பில், நீங்கள் ஒரு சிறிய உயிரினம் என்று உணரவைப்பது தான் யாத்திரையின் நோக்கம். இந்த விரிந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு தூசி என்று அறிந்துகொள்ளத்தான் இந்த பயணம். அந்தச் சிறிய நிலையை அறிவதும் அனுபவிப்பதும் கொண்டாடுவதும்தான் இப்பயணத்தின் நோக்கம். நாம் தூசு போன்றவர்தான். ஆனால் விருப்பத்துடன் இருந்தால் இந்த முழு உலகையும் நமக்குள் அடக்கிக்கொள்ளவும் முடியும். அதுதான் மனிதராக இருப்பதன் மகத்துவம்
புனித யாத்திரையாக புகழ்பெற்ற கோயில்களுக்கு செல்வது இந்து மக்களின் செயலாகும். இந்தியாவில் எண்ணற்ற இந்து சமய புனித தலங்கள் உள்ளன. இமயமலை, கேதார்நாத், கங்கோத்ரி, வாரணாசி, யமுனோத்திரி, அலகாபாத், அரித்துவார்-ரிசிகேசு, மதுரா, உத்தரப் பிரதேசம்-பிருந்தாவனம், அயோத்தி போன்றவை வட இந்திய தலங்களாகும்.
தென்இந்தியாவில் கும்பகோணம், பழனி, சமயபுரம், சபரிமலை, திருப்பதி, பஞ்சபூதத் தலங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கன.
This release of ஆன்மிக யாத்திரை / Aanmiga yath Android App available in 2 variants. Please select the variant to download. Please read our FAQ to find out which variant is suitable for your Android device based on Screen DPI and Processor Architecture.
If you are looking to download other versions of ஆன்மிக யாத்திரை / Aanmiga yath Android App, We have 4 versions in our database. Please select one of them below to download.