அஸ்ஸலாமு அலைக்கும்.
இஸ்லாத்தின் அடிப்படை தூண்களில் ஒன்றான ஹஜ் எனும் மார்க்க கடமையை, பல இலட்சங்கள் செலவு செய்து நிறைவேற்றும் பல முஸ்லிம்கள், அதனை தூதர் காட்டிய வழியில் செய்யாமல், தங்களை அழைத்துச் செல்லும் வழிகாட்டி கூறும் வகையில் கண்மூடித்தனமாக செய்து, தங்களை ஹஜ்ஜை பாழாக்குகின்றனர்.
இந்த இடத்தில் இந்த துஆவை ஓத வேண்டும் என்று யாராவது கூறினால், ஹதீஸில் உள்ளதா எனப் பார்க்காமல், கண்மூடித்தனமாக செய்யும் பல மக்கள் உள்ளனர். இவ்வாறு செய்துவிட்டு இறைவனிடத்தில் எப்படி ஹஜ்ஜுக்குரிய முழுமையான கூலியை எதிர்பார்க்க முடியும்?
எனவே தான், ஹஜ் - உம்ரா வழிகாட்டி எனும் இந்த செயலியை வெளியிட்டுள்ளேன். புத்தகத்தை போன்று இல்லாமல், ஹஜ் உம்ராவின் ஒவ்வொரு செயலையும், இந்த செயலியைக் கொண்டே செய்யும் வகையில், Step-1, Step-2, Step-3 என அமைத்துள்ளேன்.
எனவே, இனி மனித வழிகாட்டி (Guide) யாரும் தேவையில்லை. ஹஜ்ஜின் அனைத்து செயல்களையும் என்னால் இயன்ற அளவிற்கு ஆதாரத்துடனும், வரிசைப்படியும் தொகுத்துள்ளேன். இதில் தவறுகள் இருந்தால், [email protected] க்கு மெயில் அனுப்பவும்.
இதில் உள்ள ஆக்கங்கள் பெரும்பாலானவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களுக்கு குறிப்பாக, பி. ஜெய்னுல் ஆபிதீன், ஷம்சுல் லுஹா, ஆகியோருக்கு உரியது. இதில் எனது உழைப்பு மிகக் குறைவு தான். ஆகவே, அவர்களுக்காகவும், எனக்காகவும் இறைவனிடத்தில் இம்மை, மறுமை வெற்றிக்காக துஆச் செய்யுங்கள்.
M.G.Farook. Singarathope. Trichy.
--------------------------------------------------------------------
குறிப்பு : Video அல்லது மற்ற ஏதேனும் வேலை செய்யாவிட்டால், Google Playstore Comment பகுதியில் கண்டிப்பாக தெரிவிக்கவும். அதனை சரி செய்வதற்கு இது அவசியம். ஸலாம்.
This version of Tamil Hajj Guide Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of Tamil Hajj Guide Android App, We have 2 versions in our database. Please select one of them below to download.